நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் கீழ்முகம் காளிப்பட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் படிக்கட்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாய்வுதள கான்கிரீட் பாதைகள் சேதம் அடைந்து உள்ளது என "தினத்தந்தி" புகார்பெட்டி பகுதியில் செய்தி வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் படிக்கட்டுகள் மற்றும் சாய்வுதளத்தை சீரமைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய "தினத்தந்தி"க்கும் அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-மணி, காளிப்பட்டி.