நாகை கலெக்டர் அலுவலகம் எதிரே பஸ் நிறுத்த கட்டிடம் பல மாதங்களாக கட்டப்பட்டு வருகிறது. இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள் பொதுமக்கள் அங்கே நிற்பதில் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிறுத்தம் விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை