பராமரிப்பில்லாத பூங்கா

Update: 2026-11-22 06:38 GMT

சென்னை பெரும்பாக்கம், நேசமணி நகர் முதல் தெருவில் பூங்கா உள்ளது. மாலை நேரங்களில் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் பூங்காவில் பொழுதுபோக்குவார்கள். ஆனால் இந்த பூங்கா பராமரிப்பில்லாமல் செடிகள் நிறைந்து காணப்படுகிறது. மழைக்காலம் என்பதால், அடர்ந்த செடிகளில் விஷ உயிரினங்கள் ஏதேனும் இருக்கலாம் என அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்