திருவாரூர் மாவட்டம் நாகூர் மெயின் ரோடு சோழங்கநல்லூரில் உள்ள குளம் தூர் வாரப்படாமல் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி உள்ளது. இதனால் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் உள்ள குளத்தை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்