நாகை கீரக்கொல்லை ரெயில்வே கேட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் அந்த பகுதியை கடந்து செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரெயில்வே கேட் அருகே கீழ் பாலம் கட்ட முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை