திருவாரூர் மாவட்டம் திருக்களர் சாளுவன் ஆற்றின் கரைமேல் உள்ள கொள்ளிடம் வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வீணாக செல்லும் குடிநீரை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,திருவாரூர்