தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தை பகுதியில் உள்ள தாசில்தார் குடியிருப்பு பங்களா சேதமடைந்து முட்புதர்கள் முளைத்து புதர் மண்டி உள்ளது என "தினத்தந்தி" புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது இந்த குடியிருப்பு பங்களாவை சுத்தப்படுத்தி உள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய "தினத்தந்தி"க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-சந்தோஷ், நல்லம்பள்ளி.