நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கருவேல மரத்தில் உள்ள கிளைகள் படுவதால் அதன் முட்கள் குத்தி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வடக்கு பொய்கை நல்லூர்.