திருவள்ளூர் மாவட்டம் பெரவள்ளூர், சக்திவேல் நகர் பகுதியில் சாலை ஓரங்களில் மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் உள்ள மரக்கிளைகள் சாலையில் இடையூறாக வளர்ந்துள்ளன. இதனால் பெரிய வாகனங்கள் அந்த சாலைகளில் செல்ல சிரமம் ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள மின்வயர்களிலும் உரசும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் இடையூறான மரக்கிளைகளை அகற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்.