கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சேலம் புறவழிச்சாலையில் அமைந்துள்ளது. இங்கு பஸ்கள் ஏதும் நின்று செல்லாததால், தினமும் இங்கு வரும் பொதுமக்கள் கால்கடுக்க நடந்தோ, ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களிலோ வந்து செல்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பஸ்கள் நின்று செல்ல அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.