அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் முத்துவாஞ்சேரி மற்றும் குஞ்சுவெளி ஆகிய பகுதிகளில் இருந்து விக்கிரமங்கலம் வழியாக அரியலூர் பகுதிகளுக்கு பள்ளி நேரங்களில் கிராவல் மண் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் அப்பகுதி பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடன் பாதுகாப்பற்ற சூழலில் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே பள்ளி நேரங்களில் இந்த பாதையில் லாரிகள் இயக்கப்படுவதை முழுமையாக தடை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.