வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-08-23 13:42 GMT

ஓசூரில், பாகலூர் சாலையிலிருந்து இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பஸ் நிலையம் வழியாகவும், தாலுகா அலுவலக சாலை வழியாகவும் செல்வதற்கு ஜி.ஆர்.டி. சர்க்கிள் எதிரேயுள்ள பாலத்தின் கீழ் சுற்றிவளைத்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது கடந்த 3 நாட்களாக திடீரென ஜி.ஆர்.டி. சர்க்கிள் எதிரிலிருந்து நேராக செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடிக்கடி மாற்றப்படுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்லும் வகையில் நிரந்தர நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி