காவேரிப்பட்டணத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள பூக்கடை, பழக்கடை, பாத்திரக்கடை, துணிக்கடை உள்ளிட்ட ஏராளமான வணிக நிறுவனங்கள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும்போது விபத்து அபாயம் ஏற்படுகிறது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும் என்றும், நடைபாதை ஆக்கிரமிப்பை பேரூராட்சி நிர்வாகம் முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.