போக்குவரத்து நெரிசல்

Update: 2026-08-23 13:37 GMT

கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆவின் மேம்பாலம் அருகே சாலை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதி வழியாக பெங்களூரு, சேலம், சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கின்றன. மேலும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு சென்று வருபவர்கள் மிகுந்த சிரமத்தை தினசரி அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து சாலை பணிகளை உடனடியாக முடிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகள்

பஸ் வசதி