மடத்துக்குளத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலையில், சர்க்கரை ஆலை பிரிவு உள்ளது. இந்த வழியாக சர்க்கரை ஆலைக்கு தேவைப்படும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக, இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். அப்பகுதியில் உள்ள சிக்னல் கம்பம் வாகனம் மோதி சேதமடைந்த நிலையில், சாலையில் சாய்ந்து உள்ளது. போக்குவரத்து நிறைந்த இந்த சந்திப்பில் கம்பம் சாய்ந்து நிற்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன்பு, சாய்ந்த நிலையில் உள்ள சிக்னல் கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கதிரேசன், மடத்துக்குளம்.