இரவுநேர பஸ் வசதி

Update: 2026-08-23 17:12 GMT

கழுகுமலையில் இருந்து லட்சுமியாபுரம், ராமநாதபுரம், குளக்கட்டாக்குறிச்சி, வெம்பக்கோட்டை வழியாக சிவகாசிக்கு இரவு 7 மணி வரை மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் வெளியூரிலிருந்து வரும் பயணிகளும் வேலைக்கு சென்று வருகின்ற பயணிகளும் சரியான நேரத்துக்கு பஸ்களில் ஏற முடிவதில்லை. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதலாக இரவு 9 மணி வரை அரசு பஸ்களை இயக்க வேண்டுமாறு கோரிக்கை விடுக்கிறேன்.

மேலும் செய்திகள்