அரியாங்குப்பம்-வீராம்பட்டினம் ரோட்டில், காக்காயந்தோப்பு முதல் வீராம்பட்டினம் தெப்பக்குளம் வரை சாலையின் இருபுறமும் ‘யு’ வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வாய்க்காலை ஒட்டி சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், அரிக்கன் மேடு பகுதிகளில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.