சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியில் இருந்து பிரவலூர், ஒக்கூர், மேலமங்களம், காளையார்மங்களம், அய்யம்பட்டி, நாட்டரசன்கோட்டை, வழியாக சிவகங்கைக்கு மாலை நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் கீழப்பூங்குடியில் இருந்த பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்த மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.