ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ராதா ஊராட்சி திருவிருந்தார்கோட்டை முதல் கீழ்குடி வரை செல்லும் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளன. இதனால் அவ்வழியை பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட சாலையை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.