சிறுபாக்கம் பகுதியில் கடலூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அ.களத்தூர், அடரி, மாங்குளம், சிறுபாக்கம், ஒரங்கூர் பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் அப்பகுதியை கடக்கவே பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே, விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து, அங்கு பேரிகார்டுகள் அமைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.