சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், ஈரோடு மற்றும் பவானி செல்லும் பஸ்கள் நின்று செல்லும் பயணிகள் நிழற்கூடத்தில் சிலர் போதையில் படுத்து உறங்குகின்றனர். மேலும் அங்கு சிறுநீர் கழிப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதற்கு சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.