கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2026-10-11 17:15 GMT

குடியாத்தம் நகரை சுற்றி உள்ள லத்தேரி, கே.வி.குப்பம், பரதராமி சைனகுண்டா, வளத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் பலர் பஸ்களில் குடியாத்தத்துக்கு வந்து செல்கின்றனர். பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலால் மாணவர்கள் படிக்கட்டுகளிலும், பஸ்சின் பின்பக்கமும் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சுப்புராஜ், குடியாத்தம்.

மேலும் செய்திகள்