கோவை மாநகர பகுதியில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் 2 படிக்கட்டு பகுதிகளிலும் கதவுகள் பொருத்தப்பட்டு உள்ளன. அதற்கான சுவிட்ச் டிரைவர் வசம் உள்ளது. பஸ் நிறுத்தத்தில் நிற்கும்போது, டிரைவர் கதவை திறக்க பொத்தானை அழுத்துவார். பின்னர் பஸ்சை இயக்கும்போது அதே பொத்தானை அழுத்தி கதவை மூடி விடுவார். ஆனால் சில பஸ்களில் கதவுகள் மூடப்படுவது இல்லை. திறந்த நிலையிலேயே இருக்கிறது. இதனால் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது பயணிகள் தவறி கீழே விழும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.