ராசிபுரம் ரெயில் நிலையத்தில் பழனி, நெல்லை, சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் ரெயில்கள் நின்று செல்கின்றன. இந்த ரெயில்களை வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த ரெயில் நிலையத்துக்கு ராசிபுரம் பஸ் நிலையம், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சரிவர பஸ் வசதி இல்லை. ஆட்டோ, டாக்சி ேபான்றவற்றில் அதிக கட்டணம் செலுத்தி பயணிகள் ரெயில் நிலையம் வருகின்றனர். எனவே பகல் மற்றும் இரவு நேரங்களில் டவுன் பஸ்களை ராசிபுரம் ரெயில் நிலையத்திற்கு இயக்கினால் ரெயில் பயணிகள் மிகவும் பயன் அடைவார்கள்.