கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2026-10-11 14:28 GMT

 விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இருந்து மதுரைக்கு சென்று வர போதிய பஸ் வசதிகள் இல்லை. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிகிச்சைக்கு செல்லும் முதியோர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நலன் கருதி  மேற்கண்ட வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்