திருவண்ணாமலை-சென்னை செல்லும் புறநகர் பேருந்துகள் செஞ்சி கூட்டுரோட்டிலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால் கூட்டு ரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வயதானவர்கள் மற்றும் பொதுமக்களும் கூட்டுரோடு வரை நடந்து சென்று பஸ் ஏற முடியாத நிலை உருவாகியுள்ளது. பயணிகளின் நலன் மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அனைத்து பஸ்களும் பஸ் நிலையம் சென்று வர போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.