கடலூர் துறைமுகம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் இ்ங்கு தினசரி மாணவ, மாணவிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச்செல்லும் நிலை உள்ளது. எனவே கடலூர் துறைமுகம் பஸ் நிறுத்தத்தின் இருபுறமும் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.