ஆபத்தான பள்ளம்

Update: 2026-06-07 06:39 GMT

சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் பகுதியில், மின்சார வாரியம் மூலம் சாலை அருகே பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாமல் கற்களால் நிரப்பட்டுள்ளது. இந்த சாலையில் அதிகமான பாதசாரிகள் தினந்தோறும் செல்கின்றனர். இந்த ஆபத்தான பள்ளம் சாலையை கடந்து செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்