சென்னை அமைந்தகரை அடுத்த ராணி அண்ணாநகர் பகுதியில் தெருப்பெயர் உள்ள பலகை மிகவும் சேதமடைந்து உள்ளது. அதில் பெயர் காணாமல் போன நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதிக்கு வரும் வெளியூர் மக்கள், தபால் ஊழியர்கள், உணவு டெலிவரி ஊழியர்கள் அனைவரும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே மாநராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பெயர் பலகையை சரிசெய்ய வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.