புகார் எதிரொலி

Update: 2026-06-07 06:37 GMT

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கொசவன்பேட்டை பகுதியில் தெருநாய்கள் சாலையில் கூட்டமாக பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் துரத்தி கடிக்க பாய்கிறது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக அச்சுறுத்தலாக இருந்த தெருநாய்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தினார்கள். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்