பஸ் ஸ்டாப் அமைக்கப்படுமா?

Update: 2026-06-07 06:46 GMT

திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் தினமும் பள்ளி- கல்லூரி, வேலைக்கு என பஸ் போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த பகுதியில் பஸ் நிறுத்தம் இல்லாததால் பஸ்கள் சரிவர நிறுத்தப்படுவதில்லை. தற்போது கோடைகாலம் என்பதால் மக்கள் பல மணிநேரம் வெயிலில் காத்திருக்கவேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் ஸ்டாப் அமைத்துதர அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்