அங்காடி கட்டிடம் செயல்படுமா?

Update: 2022-07-23 13:10 GMT


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் ஊராட்சியில் சுமார் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த ஊராட்சியில் கங்களாஞ்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட  அங்காடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் எந்தவித பராமரிப்பும் இன்றி காரைகள் பெயர்ந்து சேதமடைந்து  உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அங்காடி கட்டிடத்தை புதுப்பித்து மீண்டும் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

பொதுமக்கள், திருமருகல்

மேலும் செய்திகள்