நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் அருகே கருவேலங்கடையை இணைக்கும் பத்மநாபன் சாலை அருகே ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றை பொதுமக்கள் கடப்பதற்கு வசதியாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலம் மிகவும் பழமையானது என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சிறிய பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வடக்கு பொய்கைநல்லூர்.