பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்படுமா?

Update: 2022-07-22 14:20 GMT


நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வடகரை ஊராட்சி, வங்காரன்மாவடி கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகள் உள்ளன. இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடகரை கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பகுதி நேர ரேஷன் கடையை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வங்காரன்மாவடி, பொது மக்கள்.

மேலும் செய்திகள்