மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்திற்கு இடையூராக குதிரைகள் சுற்றித்திரிகின்றன.குறிப்பாக ரெயில்நிலையம், பஸ்நிலையம் மற்றும் இடத்தெரு போன்ற இடங்களில் சாலையில் குதிரைகள் செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். மேலும் நடந்து செல்லும் பொதுமக்களையும் விரட்டுவதால் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும், மேலும் குதிரைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.