மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நீதிமன்றம் அருகில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் படித்துறையை பலர் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் மது அருந்தி விட்டு தகராறிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தின் கரைகள் மற்றும் படித்துறையை சீரமைத்து தர வேண்டும்.
ஞானமணி, மயிலாடுதுறை.