நாகை மாவட்டம் அந்தனப்பேட்டை கிராமத்தில் சமுதாய நலக் கூடம் இதுவரை கட்டித் தரப் படவில்லை.சாதாரண சிறிய குடும்ப விழாக்களுக்கும் கூட அருகில் உள்ள நாகைக்கு செல்ல வேண்டியுள்ளது.இதன்காரணமாக சாதாரண மக்கள் கால விரயம்,அதிக பொருட்செலவையும் சந்திக்க வேண்டியுள்ளது.எனவே பொது நலன் வேண்டியும் ஊராட்சியின் வருவாய் மேம்படும் வகையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சமுதாய கூடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குணசேகரன், அந்தனப்பேட்டை.