நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் நாகூர்-நன்னிலம் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை