திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தம் அருகே உள்ள அடிபம்பு சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குழாயை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்