மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் சேத்திர பாலபுரம் ஊராட்சி அரையபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நடேசனார் காலனி பகுதியில் இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மின் கம்பம் அருகே செல்லும் போதும் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும்.
அரையபுரம், கிராமவாசிகள்