நாகை மாவட்டம், நாகை - நாகூர் சாலையில் வெட்டாற்று பாலம் பராமரிப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது.இதனால் கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் வடகுடி ரோடு வழியாக செல்கின்றன. காலை, மாலை பள்ளி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பள்ளி நேரங்களில் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை