சீரமைக்கப்பட்ட குழாய்

Update: 2022-07-21 13:07 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி போலீஸ் லைன் பகு தியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி குழாயில் உடைப்பு ஏற்பட்டுகுடி தண்ணீர் வீணாக தெருவில்சென்றது. இதனை சுட்டிக்காட்டி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிட்டதைத்தொடர்ந்து அதிகாரிகள் குடிநீர் குழாயை சீரமைத்தனர். இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், கீழ்வேளூர்


மேலும் செய்திகள்