குதிரைகள் தொல்லை

Update: 2023-03-22 11:58 GMT


நாகை அரசு மருத்துவமனை எதிரே சாலையில் குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். இதனால் வாகனங்கள், நிலை தடுமாறி குதிரைகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் குதிரைகள் தள்ளிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்