தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக மேலவீதி, தெற்குவீதி, புதிய பஸ்நிலையம், வடக்கு வீதி போன்ற இடங்களில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சாலையின் குறுக்கே மாடுகள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும். மேலும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சாவூர்.