மின் விளக்கு எரியுமா?

Update: 2023-03-08 14:31 GMT


நாகையிலிருந்து புதிய கடற்கரை செல்லும் பாதையில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்குகள் சரிவர எரிவது இல்லை. இதனால் இந்த பகுதியில் இருள் சூழ்ந்து உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். மேலும் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்?

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்