பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-07-20 14:03 GMT


நாகை மாவட்டம் திருமருகலில்லிருந்து,திருச்செங்காட்டங்குடி,கீழப்பூதனூர்,மேலப்பூதனூர்,கீழத்தஞ்சாவூர்,சோழங்கநல்லூர்,கொட்டாரக்குடி,கடம்பங்குடி,மூங்கில்குடி,கார்தக்குடி வழியாக கீழ்வேளூர் வரை தனியார் பஸ் இயங்கி வந்தது. கொரோனா காரணமாக இந்த பஸ் நிறுத்தப்பட்டுவிட்டது. பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பஸ் வசதி இல்லாததால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் மேற்கண்ட வழிதடத்தில அரசு பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருமருகல்


மேலும் செய்திகள்