மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சட்டநாதபுரம் கைகாட்டி வரை உள்ள நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டு தார் சாலை அருகில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி மோட்டார் சைக்கிள் மற்றும் நடந்து செல்பவர்கள் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக சீர்காழி கால்நடை மருத்துவமனை மற்றும் சட்டநாதபுரம் பஸ் நிறுத்தம் போன்ற இடங்களில் மண்ணரிப்பால் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?
பெரியசாமி, திட்டை