'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2023-02-05 17:51 GMT

சேலம் அருகே இரும்பாலையில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி பஸ் நிறுத்த பகுதியில் வேகத்தடைகள் எதுவும் இல்லை. இதனால் அந்த பகுதியில் வாகனங்களில் வேகமாக செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர் என 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அங்கு வேகத்தடை அமைத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-கோவிந்தசாமி, இரும்பாலை, சேலம்.

மேலும் செய்திகள்