கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம் பகுதியில் கடந்த சில மாதங்கள் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.குறிப்பாக, வாரிக்கரை பாலம் அருகே, அன்னமரசனார் ஆற்றின் கரையோரத்தில் ஏராளமான பன்றிகள் ஒரே இடத்தில் கூட்டமாக நிற்கின்றன. மேலும் அந்த இடத்தில் துர்நாற்றம் அதிகளவில் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்கள், வடபாதிமங்கலம்.