கூத்தாநல்லூர் தாலுகா, விழல்கோட்டகம் கிராமத்தில் இறந்தவர்களை ஈமச் சடங்கு செய்வதற்கு மயான கொட்டகை அமைக்கப்பட்டது. தற்போது அந்த மயான கொட்டகை சேதமடைந்து உள்ளது. இதனால், அந்த மயான கொட்டகை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் , சேதமடைந்த மயான கொட்டகையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்கள், விழல்கோட்டகம்.